லண்டன்: திருமணம் செய்துகொள்ளாமல் ரகசியமாக தனது 51வது வயதில் ஒரு பெண் குழந்தை பெற்ற நடிகையும், பாடகி யும், மாடலுமான நவோமி காம்ப்பெல், தற்போது 53வது வயதில் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நவோமி காம்ப்பெல் திருமணம் செய்துகொள்ளவில்லை. தனிமையில் வசித்து வரும் அவருக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. 2021 மே மாதம் தனது 51வது வயதில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அக்குழந்தை தத்தெடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதை மறுத்த நவோமி காம்ப்பெல், ‘குழந்தையை நான் தத்தெடுக்கவில்லை. அவள் என் குழந்தை’ என்றார். இந்நிலையில், தனது 53வது வயதில் 2வதாக ஒரு ஆண் குழந்தையை அவர் பெற்றெடுத்தார். தனது இன்ஸ்டாகிராமில், தனக்கு 2வது குழந்தை பிறந்த மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். தனது மகன் மற்றும் மூத்த மகளின் கையை பிடித்தபடி போஸ் கொடுக்கும் போட்டோவை வெளியிட்டுள்ள அவர், ‘எனது அன்பே, மகிழ்வான இத்தருணத்தில் நீங்கள் அதிகமாக நேசிக்கப்படுகிறீர்கள். அன்பால் சூழப்பட்டு இருக்கிறீர்கள். நீங்கள் கடவுள் தந்த பரிசு. வெல்கம் பேபி பாய்’ என்று குறிப்பிட்டுள்ள அவர், மற்ற தாய்மார்களையும் ஊக்குவிக்கும் விதமாக, ‘ஒரு தாயாக மாற இது ஒன்றும் தாமதம் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், நவோமி காம்ப்பெல் ரகசியமாக பெற்றெடுத்த 2 குழந்தைகளின் தந்தை யார் என்பது குறித்து நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.
74