சென்னை: உண்மை சம்பவ கதையில் நடிக்கிறார் சண்முக பாண்டியன். விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன், கடைசியாக மதுரை வீரன் படத்தில் நடித்தார். இப்போது புதியவர் அன்பு இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. காட்டில் வாழும் இளைஞனுக்கும் அங்குள்ள யானைகளுக்கும் இடையிலான பிணைப்பை சொல்லும் வகையில் படக் கதை அமைந்துள்ளது. ஒடிசாவில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இதன் கதை அமைக்கப்பட்டுள்ளதாம். இந்த படத்துக்காக தாய்லாந்திலிருந்து 20 யானைகள் அழைத்து வரப்படுகிறது. ஒடிசா, தாய்லாந்து, கேரளா காடுகளில் படப்பிடிப்பு நடத்த உள்ளனர்.
85