சென்னை: இயக்குனர்கள் புஷ்கர், காயத்ரி தயாரித்த ‘சுழல்’ வெப்சீரிஸின் 2வது சீசனுக்கான படப்பிடிப்பு தொடங்க உள்ளது. பிரம்மா மற்றும் அனுசரன் முருகையன் இயக்கத்தில், சாம் சி.எஸ் இசையில் கடந்த ஆண்டு அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான வெப்சீரிஸ் ‘சுழல்’. பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, கதிர், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் இந்த இணைய தொடரில் நடித்திருந்தனர். பெண் குழந்தைகள் குடும்ப உறுப்பினர்களாலேயே எந்த அளவுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதை திரில் திரைக்கதையுடன் இந்த தொடர் கூறியது. இந்நிலையில் தற்போது அதன் தொடர்ச்சியாக சுழல் இணையதொடரின் 2ம் பாகம் தற்போது தொடங்கப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. விரைவில் இந்த இணைய தொடரின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் துவங்க உள்ளது என்றும் இதற்கான படப்பிடிப்பு பணிகளும் துவங்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
57