சென்னை: டாக்டராக இருந்து நடிகராக மாறியவர், வசந்த் ரவி. தற்போது ரஜினிகாந்துடன் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். நேற்று அவரது பிறந்தநாள். இதையொட்டி அவர் கூறியதாவது: என் தந்தை வசந்த பவன் ரவி, அவரைப்போலவே நானும் தொழில்துறையில் ஈடுபட வேண்டும் என்று எதிர்பார்த்தார். அது நடக்கவில்லை. டாக்டரான நான் சினிமா ஆர்வம் காரணமாக நடிக்க வந்தேன். ராம் இயக்கிய ‘தரமணி’, அருண் மாதேஸ்வரன் இயக்கிய ‘ராக்கி’ ஆகிய படங்கள் ரசிகர்களிடம் எனக்கு நல்ல அடையாளம் கொடுத்தன. நெல்சன் திலீப்குமார் என்னை அழைத்து ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கினார்.
முதல்முறையாக ரஜினி சாருடன் சேர்ந்து நடித்த அனுபவத்தை என் வாழ்நாளில் மறக்க முடியாது. அடுத்து ‘அஸ்வின்ஸ்’ என்ற படத்தில் யுடியூபராக நடிக்கிறேன். ராஜீவ் மேனன் மகள் சரஸ்வதி மேனன் எனக்கு ேஜாடியாக நடிக்கிறார். சத்யராஜ், ராஜீவ் மேனன் ஆகியோருடன் இணைந்து ‘வெப்பன்’ படத்தில் நடிக்கிறேன். இதில் எனக்கு தான்யா ஹோப் ஜோடி. தவிர, ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறேன். ‘கண்ட நாள் முதல்’ பிரியா.வி இயக்கத்திலும் நடிக்கிறேன். தமிழை தொடர்ந்து மற்ற மொழிகளில் நடிக்க வாய்ப்பு வருகிறது. எனக்கு மிகவும் பிடித்த கதையும், கேரக்டரும் அமைந்தால் அனைத்து மொழிகளிலும் நடிப்பேன்.