சென்னை: தமிழில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் நடித்த ‘வணக்கம் சென்னை’ என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமானவர், கிருத்திகா உதயநிதி. அடுத்து விஜய் ஆண்டனி நடித்த ‘காளி’ என்ற படத்தை இயக்கினார். இதையடுத்து ‘பேப்பர் ராக்கெட்’ என்ற வெப்தொடரை இயக்கிய அவர், தற்போது ஜெயம் ரவி, நித்யா மேனன், யோகி பாபு, டிஜெ பானு, ஜான் கொக்கேன் நடிக்கும் ‘காதலிக்க நேரமில்லை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதை ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.
தமிழில் கடந்த 1964ல் ஸ்ரீதர் இயக்கத்தில் திரைக்கு வந்து வெற்றிபெற்ற ‘காதலிக்க நேரமில்லை’ படத்துக்கும், தற்போது கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள படத்துக்கும் டைட்டில் தவிர வேறெந்த தொடர்பும் இல்லை. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார். இதை சினேகன் எழுதியுள்ளார். இதுபற்றி கிருத்திகா உதயநிதி கூறுகையில், ‘முதல் பாடல் பதிவு மகிழ்ச்சியாக நடந்தது’ என்றார்.