சித்தார்த் நடிக்கும் சித்தா: பர்ஸ்ட் லுக் வெளியிட்ட கமல்
சென்னை: ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘ஜில் ஜங் ஜக்’ மற்றும் ‘அவள்’ ஆகிய படங்களை தொடர்ந்து எதகி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் படத்துக்கு சித்தா என தலைப்பு வைத்துள்ளனர். சித்தப்பா என்பதன் சுருக்கமாக சித்தா என தலைப்பு வைத்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதில் சித்தார்த் ஹீரோவாக நடிக்கிறார். பண்ணையாரும் பத்மினியும் சேதுபதி, சிந்துபாத் படங்களை இயக்கிய எஸ்.யு. அருண்குமார் இந்த படத்தை இயக்குகிறார். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், பணியாற்ற உள்ள டெக்னீஷியன்கள் விவரம் விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை சமீபத்தில் கமல்ஹாசன் வெளியிட்டார். ‘இது குடும்ப ஆடியன்ஸை கவரும் விதமான படமாகும். இதில் மனித உணர்வுகளுக்கு அதிக மதிப்பு கொடுத்து படமாக்கப்பட்டுள்ளது. சிறுமிக்கும் அவளது சித்தப்பாவுக்கும் இடையிலான உறவு, குடும்பத்தில் ஹீரோவின் பங்கு, அவனது காதல், கோபம் என்று அனைத்து விஷயங்களுக்கும் கதையில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது’ என பட தரப்பு தெரிவித்துள்ளது.