சென்னை: சண்டக்கோழி, சென்னை 600028 உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு கிராபிக்ஸ் டிசைனராக பணியாற்றிய சவுந்தர்யா ரஜினிகாந்த், கோவா படம் மூலம் தயாரிப்பாளரானார். பின்பு ரஜினியை வைத்து கோச்சடையான், தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி 2 படங்களை இயக்கினார். அதன் பிறகு எந்த படங்களிலும் பணியாற்றாமல் இருந்த சவுந்தர்யா, தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படப் பணிகளுக்கு திரும்பியுள்ளார். அவர் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்துடன் இணைந்து, ‘கேங்க்ஸ்’ என்ற தலைப்பில் வெப் தொடருக்கு ஷோ ரன்னராக பணியாற்றுகிறார். அசோக் செல்வன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க நோஹா ஆபிரஹாம் என்பவர் இயக்குகிறார். இதன் பூஜை புகைப்படங்களை நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த சவுந்தர்யா, அவரது தந்தை ரஜினிகாந்திடம் ஆசி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், ரஜினியுடன் படக்குழு எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். அதில், வெப் தொடரின் க்ளாப் போர்டை ரஜினி கையில் வைத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி
வருகிறது.
42