சென்னை: நடிகர் அமித் சகலக்கல் கதாநாயகனாக நடிக்கும் ‘அஸ்த்ரா’ மலையாள திரைப்படம் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளிவர இருக்கிறது. இதில் போலீஸ் அதிகாரி வேடத்தில் அவர் நடித்துள்ளார். கதாநாயகியாக சுகாசினி குமரன் வயநாடு தலைசேரி காட்டிட்ல் தேன் எடுக்கும் பெண் தொழிலாளியாக நடித்துள்ளார். இவரை வன போலீஸ் அதிகாரிகள் பாலியல் பலாத்காரம் செய்து விடுகின்றனர். இதையடுத்து காட்டில் பெண் போராளியாக மாறும் சுகாசினி குமரன் தன்னை சீரழித்தவர்களை பழிவாங்குவதே கதை.
சுகாசினி குமரன் தமிழில் யோகி பாபு நடித்த லக்கி மேன் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் சிவாஜி பேரன் துஷ்யவந்த் முதன் முதலாக மலையாள படவுலகில் நுழையவுள்ளார். மோகன் சித்ரா இசையமைத்துள்ளார். ரோனி ரபேல் பின்னணி இசை அமைத்துள்ளார். ஆஷாத் அலவின் இயக்கி உள்ளார். கலாபவன் ஷாஜோன் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். திரைக்கதையை எழுத்தாளர்கள் வினோ கே மோகன், ஜி.ஜு ராஜ் எழுதியுள்ளனர். அகிலேஷ் மோகன் எடிட்டிங்கும், மணி பெருமாள் ஒளிப்பதிவும் செய்துள்ளனர். இந்த படத்தை தயாரித்துள்ள பிரேம் கல்லட் சமீபத்தில் பட டிரைலரை வெளியிட்டுள்ளார்.