சென்னை: காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக மாறிய சந்தானம், பல படங்களில் ஹீரோவாக நடித்தார். மீண்டும் அவரை காமெடி வேடத்தில் நடிக்க சில இயக்குனர்கள் அணுகியபோது மறுத்த அவர், இனி ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார். தற்போது தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாகியுள்ள ‘கிக்’ படத்திலும், கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்திலும் நடித்துள்ள சந்தானம், அடுத்து பிரேம் ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
முக்கிய வேடங்களில் ரெடின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவத், மாசூம் சங்கர், பெப்சி விஜயன், தீனா, பிபின், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், முனீஷ்காந்த், தங்கதுரை, தீபா சங்கர், சைதை சேது, மானசி நடிக்கின்றனர். ஆர்.கே எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்துக்கு ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. தீபக்குமார் பதி ஒளிப்பதிவு செய்ய, ஆஃப்ரோ இசை அமைக்கிறார். சந்தானம் ஜோடியாக சுரபி நடிக்கிறார். ஏற்கனவே தமிழில் வெளியான ‘இவன் வேற மாதிரி’, ‘வேலையில்லா பட்டதாரி’, ‘ஜீவா’, ‘புகழ்’ ஆகிய படங்களில் சுரபி ஹீரோயினாக நடித்திருக்கிறார்.