சென்னை: சூர்யா ஜோடியாக நஸ்ரியா நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடக்கிறது. சூர்யா இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை முடித்த பிறகு அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். சூர்யா 43 என அழைக்கப்பட்டு வரும் அந்த படத்தில் துல்கர் சல்மானும் ஒரு முக்கிய ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் படம் பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் சுதா கொங்கரா இதுவரை வெளியிடவில்லை. சூர்யா 43 படத்தில் ஹீரோயினாக நஸ்ரியா நடிக்க போவதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக நஸ்ரியாவிடம் சுதா கொங்கரா பேசி வருகிறாராம். இதில் நஸ்ரியா நடிக்க ஒப்புக்கொண்டால், கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் அவர் மீண்டும் நடிக்கப்போவது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடித்தபடி, வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்திலும் சூர்யா நடிக்க உள்ளார்.
40