சென்னை: விஷால் நடிக்கும் படம் மார்க் ஆண்டனி. இந்த படத்தின் டீசரை காட்டுவதற்காக விஜய்யை விஷால் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது விஜய்க்கு மார்க் ஆண்டனி படக்குழுவினர் பூங்கொத்து வழங்கியிருக்கிறார்கள். அப்போது விஷால், விஜயின் பெயரில் அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் உணவு வழங்கியதற்கான ரசீதை அவரிடம் வழங்கினார். அப்போது விஜய்யிடம் பேசிய விஷால் தன்னுடைய நீண்ட நாள் விருப்பமான இயக்குநராகும் ஆசை ‘துப்பறிவாளன் 2’ மூலம் தொடங்கியுள்ளதாக கூறினார். அத்துடன் தொடர்ந்து திரைப்படங்களை இயக்க உள்ளதாகவும், உங்களுக்கும் இரண்டு கதை தயார் செய்துள்ளேன் என நடிகர் விஜய்யிடம் கூறியபோது ‘நீ வா நண்பா.. நான் இருக்கிறேன்.. சேர்ந்து பயணிப்போம்’ என்று விஷாலிடம் கூறினாராம் விஜய். இந்த தகவலை விஷால் கூறியிருக்கிறார். இந்த சந்திப்பின்போது ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் மினி ஸ்டூடியோஸ் வினோத் குமார், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.
50