சென்னை: ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். அதன் பின்னர் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ தனுஷ் நடித்த ‘மாறன்’ உள்ளிட்ட படங்களில் நடித்த மாளவிகா, தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ‘தங்கலான்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் அவர் கடந்த சில மாதங்களாக கலந்து கொண்டிருக்கும் நிலையில், தனக்கு மேக்கப் போடும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களின் கேப்ஷனாக அவர் பதிவு செய்த போது ‘நான் தினமும் நான்கு முதல் ஐந்து மணி நேரங்கள் மேக்கப் மற்றும் காஸ்டியூம் ஆகியவற்றிற்காக செலவு செய்கிறேன். அந்த நேரங்களில் நான் அமைதியாக உட்கார்ந்து இருப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது’ என்று கூறியுள்ளார். இந்த படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடிப்பதால் மாளவிகாவுக்கு மேக்அப் போட 5 மணி நேரமாகிறது என படக்குழுவும் தெரிவித்துள்ளது. மாளவிகா மோகனுக்கு மேக்கப் போடும் புகைப்படங்கள் மற்றும் காஸ்டியூம் அணியும் புகைப்படங்கள் அவர்களின் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.
128