தமிழில் நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் அட்லீ தற்போது ஷாருக்கான் நடிப்பில் உருவாக்கி வரும் “ஜவான்” படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாராவும், இசையமைப்பாளராக அனிருத்தும் பணியாற்றுகின்றனர். இப்படத்தினை பாலிவுட், கோலிவுட் என அனைத்து தரப்பு ரசிகர்களும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் விஜய் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் 2016ம் ஆண்டு வெளியான “தெறி” படத்தை தற்போது தெலுங்கில் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் விஜய் நடித்த வேடத்தில் வருண்தவான் நடிக்கிறார் என கூறப்படுகிறது.
இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் எனவும், அடுத்த ஆண்டு மே 31ம் தேதி வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தின் மூலம் தெலுங்கில் தயாரிப்பாளராக களம் இறங்க உள்ளார் இயக்குனர் அட்லீ.