சென்னை: இயக்குநர் திரிநாதா ராவ் நக்கினா மற்றும் ஒளிப்பதிவாளர் கார்த்திக் கட்டமனேனி இணைந்து ‘திருட்டு பாடம்’ என்ற படத்தை உருவாக்கி உள்ளனர். இந்த படத்தில் திரிநாதா ராவ் தயாரிப்பாளர் பணியை மேற்கொள்ள, கார்த்திக் கதையை எழுதி இருக்கிறார். முன்னதாக இந்த கூட்டணி உருவாக்கிய படம்தான் ‘தமாகா’. ‘திருட்டு பாடம்’ படத்தின் டீசரை விஜய் சேதுபதி வெளியிட்டார்.
கதையில் நான்கு சிறு திருடர்கள் இணைந்து அவர்களது கிராமத்தில் உள்ள வங்கியை கொள்ளையடிக்க திட்டமிடுகின்றனர். கதையின் நாயகன் இந்திரா ராம் தனது குழுவை கொள்ளையடிக்க வழிநடத்துகிறார். இதற்காக இவர்கள் எதிர்கொள்ளும் சம்பவங்களை கலகலப்பாக சொல்லி இருக்கிறார்கள். டீசரில் ஒரு நண்பர்கள் குழுவில் நடக்கும் சம்பவங்கள் பொழுதுபோக்காக இடம்பெற்றிருக்கிறது. இந்த படத்தின் நாயகி பயல் ராதாகிருஷ்ணாவின் கதாபாத்திரம் கதையில் சுவாரஸ்யமாக இருக்கும் என்கிறது படக்குழு.