சென்னை: இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்பட பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தவர், குஷ்பு. அரசியலில் தீவிர கவனம் செலுத்திய பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்த அவர், விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ என்ற படத்தில் முக்கிய வேடம் ஏற்று நடித்திருந்தார். ஆனால், படத்தின் நீளம் கருதி அவர் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டன. பாஜ நிர்வாகிகளில் ஒருவரான குஷ்பு, தற்போது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இருக்கிறார். இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் இருந்து சிறிது காலம் விலகுவதாக தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ‘எனக்கு கொஞ்சம் கட்டாய ஓய்வு தேவை என்பதால், சமூக வலைத்தள ரேடாரில் இருந்து சற்று விலகி இருக்கிறேன். விரைவில் இணைகிறேன். அதுவரை கவனமாக இருங்கள். நன்றாக இருங்கள். பாசிட்டிவ்வாக இருங்கள். அனைவரையும் நேசிக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
117