மும்பை: மிகவும் செக்ஸியான நடிகை ஊர்வசி ரவுடேலா என்று இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா கூறிய கருத்து விவாதப் பொருளாக மாறியுள்ளது. பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலாவின் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அடிக்கடி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இவருக்கு, இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டுடன் காதல் இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகின்றன. ஆனால், தற்போது மற்றொரு இந்திய கிரிக்கெட் வீரரான ரவீந்திர ஜடேஜா, நடிகை ஊர்வசி ரவுடேலா குறித்து பரபரப்பு கருத்தை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து ரவீந்திர ஜடேஜாவிடம், ‘பாலிவுட் நடிகைகளில் யார் மிகவும் பிடிக்கும்?’ என்று நிருபர் கேட்டார். அதற்கு அவர், ‘ஊர்வசி ரவுடேலா தான்’ என்றார். பிறகு உடனே, ‘அவர் செக்ஸியாக இருக்கிறார்’ என்றார் ஜடேஜா. ரவீந்திர ஜடேஜாவின் இந்த பதில், சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஊர்வசியின் ரசிகர்கள் அவரை புகழ்ந்தும், மற்றும் சிலர் ரிஷப் பந்த் குறித்தும் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். இதற்கிடையில் இந்திய அணிக்காக விளையாடும் ஒரு வீரர், கோடானு கோடி ரசிகர்கள் பின்பற்றும் வீரர், இதுபோல் கருத்து வெளியிடலாமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் ரவீந்திர ஜடேஜா சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
34