சென்னை: விக்ரம் பிரபுவுடன் நடித்துள்ள பாயும் ஒளி நீ எனக்கு ரிலீசானதில் உற்சாகமாக இருக்கிறார் வாணி போஜன். அடுத்தடுத்து புதிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் வெப்சீரிஸ் ஒன்றிலும் நடிக்க உள்ளார். இது பற்றி வாணி போஜன் கூறும்போது, ‘விதார்த் சாருடன் ஒரு படம் நடித்திருக்கிறேன். அது அடுத்த மாதம் ரிலீஸாக இருப்பதாக கூறியுள்ளனர். நீண்ட நாட்களாக அந்த படத்திற்காக காத்திருக்கிறேன். வாலி என்ற இயக்குனரோடு ஒரு படம் செய்கிறேன். எல்லாமே கொஞ்சம் வித்தியாசமான படங்கள் தான். அதேபோல் எல்லாமே வித்தியாசமான கதாபாத்திரங்கள் ஏற்கிறேன். அதனால் ஒரே மாதிரி இருக்கிறது என ரசிகர்கள் சொல்ல மாட்டார்கள் என நம்புகிறேன். தொடர்ந்து அதர்வாவுடன் ஒரு படம் அதன் பிறகு ஒரு புதிய வெப் சீரிஸில் தற்போது ஒப்பந்தமாகி இருக்கிறேன்’ என தெரிவித்திருக்கிறார்.
74