கோயம்புத்தூர் எஸ்.பி.மோகன் ராஜ், ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் தயாரிப்பில் ‘தாதா 87’, ‘பவுடர்’ ஆகிய படங்களை இயக்கிய விஜய்ஸ்ரீ .ஜி அடுத்து இயக்கும் ‘ஹரா’ படத்தில், சில்வர் ஜூப்ளி ஹீரோ மோகன் நடிக்கிறார். வில்லனாக சுரேஷ் மேனன், அதகளம் செய்யும் அமைச்சராக வனிதா விஜயகுமார் நடிக்கின்றனர். இதுவரை பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ள மோகன், இதில் வீடுகளுக்கு ஆர்டரின்பேரில் உணவு விநியோகம் செய்யும் ஊழியர் கேரக்டரில் நடிக்கிறார்.
மற்றும் குஷ்பு, யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கவுசிக், அனித்ரா நாயர், சந்தோஷ் பிரபாகர் நடிக்கின்றனர். பள்ளியில் படிக்கும்போதே முதலுதவி, குட் டச், பேட் டச் போன்றவை குறித்து குழந்தைகளுக்கு சொல்லித்தருவது போல், ஐபிசி சட்டங்கள் குறித்தும் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்பதே ‘ஹரா’ படத்தின் கதை.