ஐதராபாத்: மது கிரியேஷன்ஸ், சம்பத் நந்தி டீம்வொர்க்ஸ் இணைந்து உருவாக்கும் ’ஒடேலா 2’ என்ற பான் இந்தியா படத்தை அசோக் தேஜா இயக்கு கிறார். இதில் தமன்னா, ஹெபா பட்டேல், வசிஷ்டா என்.சிம்ஹா, யுவா, நாக மகேஷ், வம்சி, ககன் விஹாரி, சுரேந்தர் ரெட்டி, பூபால், பூஜா ரெட்டி நடிக்கின்றனர். தற்போது வாரணாசியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. கடந்த 2022ல் ஓடிடியில் வெளியான ‘ஒடேலா ரயில்வே ஸ்டேஷன்’ என்ற கிரைம் திரில்லர் படத்தை அசோக் தேஜா இயக்க, சம்பத் நந்தி எழுதியிருந்தார். தற்போது சம்பத் நந்தி திரைக்கதையில் அசோக் தேஜா இயக்கும் ’ஒடேலா 2’ என்ற படத்தை டி.மது தயாரிக்கிறார்.
கிராமம், அதன் வளமான கலாச்சாரம், பாரம்பரிய மரபுகள் மற்றும் தீயசக்திகளிடம் இருந்து ஒடேலா மல்லண்ண சுவாமி கிராமத்தை எப்படி பாதுகாக்கிறார் என்பதை மையப்படுத்தி கதை உருவாகியுள்ளது. விஎஃப்எக்ஸ் காட்சிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும். எஸ்.சவுந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். ‘காந்தாரா’ அஜனீஷ் லோக்நாத் இசை அமைக்கிறார். படத்தின்
ஷூட்டிங்கிற்காக வாரணாசியில் தங்கியிருக்கும் தமன்னா, வாரணாசியில் இருக்கும் காசி விஸ்வநாதர் ஆலயத்துக்குச் சென்று தரிசனம் செய்தார். அந்தப் போட்டோக்களை வெளியிட்டுள்ள அவர், ‘ஹர ஹர மஹாதேவ்… காசி விஸ்வ நாத், வாரணாசி’ என்று குறிப்பிட்டுள்ளார்.