திரைக்கு வந்த ‘தரமணி’, ‘ராக்கி’ ஆகிய படங்களை தொடர்ந்து வசந்த் ரவி நடித்துள்ள படம், ‘அஸ்வின்ஸ்’. திரைக்கதை ஆசிரியர் தருண் தேஜா இயக்கியுள்ளார். இப்படம், இருளில் இருந்து மனித உலகிற்கு தீமையைக் கட்டவிழ்த்துவிடும் 1,500 ஆண்டுகள் பழமையான சாபத்திற்கு அறியாமலேயே பலியாகும் யூடியூபர்கள் குழுவை மையமாக வைத்து உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல் ஹாரர் வகையைச் சேர்ந்தது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா சார்பில் பி.வி.எஸ்.என்.பிரசாத் தயாரித்துள்ளார். விமலா ராமன், முரளிதரன், ராஜீவ் மேனன் மகள் சரஸ் மேனன், ‘நிலா காலம்’ உதயதீப், சிம்ரன் பரீக் நடித்துள்ளனர். இப்படம் கடந்த 9ம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், திடீரென்று தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி வரும் 23ம் தேதி தியேட்டர்களில் படம் வெளியாகிறது. இத்தகவலை வசந்த் ரவி தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
21