சென்னை: தனது அடுத்த படத்தில் இரட்டை வேடத்தில் விஜய் நடிக்க உள்ளார். ‘லியோ’ படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் அடுத்த படத்துக்கான வேலைகளை விரைவில் தொடங்க உள்ளார். இந்நிலையில், வெங்கட்பிரபு இயக்கும் அந்தப் படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. விஜய்க்கு இது 68வது படமாகும். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த நிலையில் இந்தப் படத்தில் விஜய்யை இரட்டை வேடத்தில் நடிக்க வைக்க உள்ளார் வெங்கட்பிரபு. அதே சமயம் இது பற்றிய கூடுதல் தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இரட்டை வேடங்களில் ஒன்று கதாநாயகன், மற்றொரு பாத்திரம் வில்லன், அப்பா, மகன் என்றெல்லாம் பல்வேறு யூகங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளிவந்தால்தான் எதுவும் உறுதியாகும் என படக்குழுவினர் கூறுகின்றனர்.
47