அஜித் நடித்த துணிவு படம் வெளியாகி எட்டு மாதங்களுக்கு பிறகு தற்போது அவர் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சஞ்சய் தத், திரிஷா, ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் நடிப்பதாகத் தகவல் வெளியானது. லைக்கா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கான அறிவிப்பு கடந்த மே 1-ஆம் தேதி வெளியானது. அனிரூத் இந்த படத்திற்கு இசையமைப்பார் என்று அறிவிக்கப்பட்டது.
இதனிடையே படப்பிடிப்புக்காக அஜித், த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் அஜர்பைஜான் சென்றுள்ளனர். இந்நிலையில், படப்பிடிப்பு தளத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.