நடிகர் விஜயின் பிறந்தநாளன்று “லியோ” திரைப்படத்தின் அப்டேட் வெளியாகும் என அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் பிறந்தநாளை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் விஜயின் பிறந்தநாளன்று “லியோ” படத்தின் ‘க்ளிம்ப்ஸ்’ வீடியோ வெளியாகும் எனவும் அந்த விடியோவிற்கு வீடியோவிற்கு கமல் வாய்ஸ் ஓவர் கொடுத்திருப்பதாகவம் தகவல் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசனுக்கு “விக்ரம்” என்ற மெகாஹிட் படத்தை கொடுத்த லோகேஷ் கனகராஜ், தமிழ் சினிமாவின் மற்றொரு உச்ச நடிகரான விஜய்யை வைத்து “லியோ” படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார், ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
“லியோ” படத்தின் ஓப்பனிங் பாடல் பிரம்மாண்டமாக காட்சி படுத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாடலில் 1000 நடன கலைஞர்களுடன் விஜய் நடனமாடும் பாடல் படமாக்கப்பட்டு வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த பாடலை விஜய்யே பாடியுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.
லோகேஷ், அனிருத், விஜய் கூட்டணியில் வந்த ‘மாஸ்டர்’ படத்தில் ‘வாத்தி கம்மிங்’ சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அந்த வரிசையில் தற்போது படமாகி வரும் ‘லியோ’ பாடலும் இடம் பெறும் என்கிறார்கள். அடுத்த சில வாரங்களில் ‘லியோ’ படப்பிடிப்பு நிறைவுக்கு வர உள்ளது. அக்டோபர் 19ம் தேதி படம் வெளியாக உள்ளது.