விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்துள்ள ‘குஷி’, படம் வரும் செப்டம்பர் 1ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தியில் திரைக்கு வருகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி, ஒய்.ரவிசங்கர் யெலமஞ்சலி தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.முரளி ஒளிப்பதிவு செய்ய, ஹேஷாம் அப்துல் வஹாப் இசை அமைக்கிறார். சிவ நிர்வானா இயக்குகிறார். தமிழில் சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ்சுக்காக லட்சுமி மூவிஸ் சார்பில் என்.வி.பிரசாத், மலையாளத்தில் முகேஷ் ஆர்.மேத்தா வெளியிடுகின்றனர். இப்படத்தின் புரமோஷனுக்காக சென்னைக்கு வந்த விஜய் தேவரகொண்டா பேசுகையில், ‘எனது படத்தை மீண்டும் தமிழ் ரசிகர்களுக்கு வழங்குவதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைக்கிறேன். ‘குஷி’ கண்டிப்பாக தமிழ் ரசிகர்களுக்கு குஷி ஏற்படுத்தும். கதை மற்றும் காட்சிகள் உங்களை வசீகரித்து சிரிக்க வைக்கும். நான் நடித்த ‘பெல்லி சூப்புலு’, ‘அர்ஜூன் ரெட்டி’, ‘கீதா கோவிந்தம்’ ஆகிய படங்களில் இருந்து தமிழ் ரசிகர்கள் என்மீது வைத்துள்ள அன்பிற்கு நன்றி. ‘குஷி’ உங்கள் முகத்தில் புன்னகையும், மனதில் சந்தோஷத்தையும் ஏற்படுத்தும் என்று உறுதியாக நம்புகிறேன்’ என்றார்.
40