விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாக்கூர், பரசுராம் பெட்லா ஆகியோர் இணையும் பெயரிடப்படாத பான் இந்தியா படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் தொடங்கியது. இது விஜய் தேவரகொண்டா நடிக்கும் 13வது படம், வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் 54வது படமாகும். தில் ராஜூ, சிரிஷ் ஆகியோர் தயாரிக்கின்றனர். கிரியேட்டிவ் தயாரிப்பு பொறுப்பை வாசு வர்மா ஏற்றுள்ளார்.
விஜய் தேவரகொண்டா, பரசுராம் பெட்லா மீண்டும் இணைந்துள்ள இப்படத்தில், ‘சீதா ராமம்’ படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான மிருணாள் தாக்கூர், விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடிக்கிறார். கே.யு.மோகனன் ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசை அமைக்கிறார்.