விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய குறும்படம் இணையதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இந்த குறும்படத்தை பார்த்து ரசிகர்கள் தரமான படம் என்றும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட காட்சிகள் உள்ளது என்றும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் திரைப்பட கல்லூரியில் படித்தார் என்பதும் எதிர்காலத்தில் இயக்குனர் ஆக வேண்டும் என்பதே அவரது ஆசை என்றும் கூறப்பட்டது. அவரை நடிக்க வைக்க ஒரு சில முயற்சிகள் நடந்தது. குறிப்பாக அல்போன்ஸ் மித்ரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருந்ததாகவும் ஆனால் சஞ்சய் இப்பொழுது வேண்டாம் என்று கூறி விட்டதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் அவ்வப்போது குறும்படங்களை இயக்கி யூடியூப் தளத்தில் பதிவு செய்து வரும் சஞ்சய், சமீபத்தில் ஒரு குறும்படத்தை இயக்கி உள்ளார். புல் தி டிரிக்கர் என்ற டைட்டில் கொண்ட இந்த குறும்படத்தில் உள்ள காட்சிகளை பார்க்கும்போது தரமாக, திரில்லாக உள்ளது என்றும் ஒரு கைதேர்ந்த இயக்குனரின் வடிவத்தில் உருவானது போல் இருக்கிறது என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். ஜேசன் சஞ்சய் நிச்சயமாக எதிர்காலத்தில் ஒரு வித்தியாசமான இயக்குனராக ஜொலிப்பார் என்றும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.