சென்னை: விஜயகாந்தின் முதல் படத்தயாரிப்பாளராக இருந்து அவரை அறிமுகப்படுத்தியவர் கம்பம்.எஸ்.பூமிநாதன். விஜயகாந்த் நடித்த முதல் படம் இனிக்கும் இளமை. இந்த படத்தில் விஜயகாந்தை அறிமுகம் செய்தவர் கம்பம்.எஸ்.பூமிநாதன் (82). இவர்தான் இப்படத்தை தயாரித்தவர். கம்பத்தை சேர்ந்த இவர், கடந்த 19ம் தேதி காலமானார். விஜயகாந்த் பட வாய்ப்புக்காக போராடிக்கொண்டிருந்தபோது, அவரை அடையாளம் கண்டுகொண்டவர்களில் கம்பம். பூமிநாதன் முக்கியமானவர். விஜயகாந்த் ஒருமுறை பிரசாரத்துக்காக கம்பம் வந்தபோது பூமிநாதனை பற்றி உயர்வாக பேசியிருந்தார். அவர்தான் தன்னை அறிமுகப்படுத்தியதாகவும் கூறினார். பூமிநாதன், மாந்தோப்பு கிளியே, இளமை கோலம் ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார். இவருக்கு மனைவி, ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர்.
7K