சென்னை: லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித் துள்ள படம், ‘சந்திரமுகி 2’. இது பி.வாசு இயக்கும் 65வது படமாகும். ராகவா லாரன்ஸ், கங்கனா ரனவத், வடிவேலு, ராதிகா, ஒய்.ஜி.மகேந்திரன், ராவ் ரமேஷ், ரவிமரியா, சுரேஷ் மேனன், விக்னேஷ், சாய் அய்யப்பன், சத்ரு, டி.எம்.கார்த்திக், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே, சுபிக்ஷா கிருஷ்ணன் நடித்திருக்கின்றனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ என்ற பாடலுக்காக ஆஸ்கர் விருது வென்ற எம்.எம்.கீரவாணி இசை அமைத் திருக்கிறார். ஹாரர் திரில்லருடன் கூடிய ஆக்ஷன் எண் டர்டெயினராக உருவாகியுள்ள இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், வரும் விநாயகர் சதுர்த்தி அன்று, அதாவது, செப்டம்பர் மாதம் 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரைக்கு வருகிறது என்று படக்குழு அறிவித்துள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான ‘சந்திரமுகி’ படத்தின் 2வது பாகமாக ‘சந்திரமுகி 2’ படம் உருவாகியுள்ளது.
78