சென்னை: ஆதிக் ரவிச் சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள பான் இந்தியா படம், ‘மார்க் ஆண்டனி’. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் முதல் பாடலின் தெலுங்கு பதிப்பை விஷால் முதல் முறையாக சொந்தக்குரலில் பாடினார். அவர் கூறுகையில், ‘பாடியது ஒரு அற்புதமான உணர்வு. பாடகராக அறிமுகமாவது மகிழ்ச்சி. பாடகர்களுக்கு என் வாழ்த்துகள். ஒரு பாடலைப் பாட எவ்வளவு முயற்சி செய்ய வேண்டும் என்று நினைத்துப் பார்க்கிறேன்’ என்றார்.
83