தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்றெடுத்து நடித்து வரும் நடிகர் விஷ்ணு விஷால், தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் வால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவரின் புதிய படம் ஒன்று நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கத்தில் விஷ்ணு விஷால் தயாரித்து, நடித்துள்ள படம் மோகன் தாஸ் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்போது இந்த படந்தை ஜியோ சினிமாஸ் நிறுவனம் நேரடியாக ஓடிடியில் வெளியிட மிகப் பெரிய தொகைக்கு வாங்கியுள்ளனராம். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து ஜியோ சினிமாஸ் நிறைய சிறிய பட்ஜெட் படங்களை வாங்க உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.