கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார், காஜல் அகர்வால். ‘திருமணமான நீங்கள் கவர்ச்சியாக நடிப்பீர்களா?’ என்று கேட்டபோது, ‘திருமணத்துக்குப் பிறகு கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று எந்தக் கட்டுப்பாடும் நான் விதிக்கவில்லை. இந்த விஷயத்தில் நானும், எனது கணவரும் வெளிப்படையாக இருக்கிறோம்.
காதல் காட்சிகள் என்றால், சக நடிகருடன் இணைந்து நெருக்கமாக நடிக்க வேண்டும். நடிக்க வந்த பின்பு, அப்படி எல்லாம் நடிக்க மாட்டேன் என்று சொல்ல முடியாது. திருமண வாழ்க்கை வேறு, செய்யும் தொழில் வேறு. இரண்டையும் தனியாகப் பிரித்து வைத்துக்கொள்வது புத்திசாலித்தனம். இரண்டையும் இணைத்து குழப்பிக்கொள்ளக் கூடாது. கதைக்கு மிகவும் பொருத்தமான காதல் காட்சி என்றால், கவர்ச்சியாக நடிப்பதில் எந்த தவறும் கிடையாது’ என்றார்.