சென்னை: யோகி பாபு முதன்மை வேடத்தில் நடிக்கும் படம், ‘வானவன்’. இதன் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டரை ஜி.வி.பிரகாஷ் குமார், இயக்குனர் மடோன் அஷ்வின் வெளியிட்டனர். முக்கிய வேடங்களில் ரமேஷ் திலக், காளி வெங்கட், லட்சுமி பிரியா சந்திரமவுலி, மாஸ்டர் சக்தி ரித்விக், பிரார்த்தனா நாதன், கல்கி ராஜா நடிக்கின்றனர். ஈடன்பிளிக்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் தாமஸ் ரென்னி ஜார்ஜ் தயாரித்துள்ளார். இவர், சாய் பல்லவி நடிப்பில் ரிலீசான ‘கார்கி’ என்ற படத்தின் இணை தயாரிப்பாளர். கேரளா சஜின் கே.சுரேந்திரன் இயக்கிஇருக்கிறார். இவர், மலையாளத்தில் ‘மாஸ்குரேட்’ என்ற முதல் வெப்தொடரை இயக்கியவர். பவி கே.பவன் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். கார்த்திக் நேத்தா பாடல்கள் எழுதியுள்ளார். மதுரை மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
125