சென்னை: புதிய படத்தில் அனிருத்துடன் இணைந்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. அரவிந்த்ராஜ் இயக்கத்தில் சரத்குமார், அமிதாஷ், காஷ்மிரா பர்தேசி நடித்திருக்கும் படம் ‘பரம்பொருள்’. கிரைம் திரில்லர் படமாக இது உருவாகிறது. எஸ்.பாண்டிகுமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் பரம்பொருள் படத்தின் முதல் பாடலான அடியாத்தி பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோவை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார். இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார். இப்பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடுகிறார்.
50