தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்துவரும் ஐஸ்வர்யா மேனன், தற்போது பான் இந்தியா படமாக உருவாகும் ‘ஸ்பை’ என்ற படத்தில் நடிக்கிறார். அவர் ‘கார்த்திகேயா 2’ ஹீரோ நிகில் சித்தார்த் ஜோடியாக நடிக்கிறார். இதையடுத்து, அஜித் குமார் நடித்த ‘வலிமை’ படத்தில் வில்லனாக நடித்த தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கும் பெயரிடப்படாத படத்தில், அவரது ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடிக்கிறார். யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. சென்னைக்கும், ஐதராபாத்துக்கும் அடிக்கடி விமானத்தில் பறப்பதாகவும், இந்த ஆண்டு தனக்கு திருப்புமுனையாக அமையும் என்றும் ஐஸ்வர்யா மேனன் சொன்னார்.
197