ஞான ஆரோக்கியராஜா கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி, ஜீசஸ் கிரேஸ் சினி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரித்துள்ள படம், ‘உதிர்’. இதில் ‘இது கதையல்ல நிஜம்’ சந்தோஷ் சரவணன், விதுஷ், மனீஷா, மனோபாலா, சிங்கம்புலி, தேவதர்ஷினி, முத்துக்காளை, ஓ.எஸ்.மணி, சிசர் மனோகர், போண்டா மணி, ஜி.வி.ஷன்மதி நடித்துள்ளனர். படிக்கும்போது ஏற்படும் காதல் சரியா, தவறா என்பதை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளது. ‘வெல்லக்கட்டி’ பாடலை சத்யபிரகாஷ், ‘சிறகு தொலைத்த பறவை’ பாடலை வைக்கம் விஜயலட்சுமி, ‘கருவில் பிறந்த காதலை’ பாடலை பவித்ரா, ‘குடிடா குடிடா’ பாடலை திப்பு ஆகியோர் பாடியுள்ளனர்.
‘நமச்சிவாய… நமச்சிவாய… ஓம் நமச்சிவாய’ புகழ் அரவிந்த் ராம் பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். மதுரை ஈஸ்வர் பின்னணி இசை அமைத்துள்ளார். ஜோ ஒளிப்பதிவு செய்ய, பாடல்களை சாய் மீடியா வெளியிட்டுள்ளது. சென்சார் ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. திரையுலக வல்லுநர்கள் சிலர், இப்படம் கண்டிப்பாக தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்படும் என்று கூறியுள்ளனர்.