சென்னை: தமிழ் இசையுலகில் இன்டீ பாடல்கள் என்ற ஆல்பங்கள் பிரபலமாகி வருகின்றன. இப்போது புதிய வரவாக ‘திமிருக்காரியே’ என்ற பாடல் இணைந்துள்ளது. கோயில் திருவிழா பின்னணியில் உருவாகியுள்ள இப்பாடலை இயக் குனர் சுதா கொங்கரா வெளியிட்டார். ஏ.கே.சசிதரன் இசையில் அந்தோணி தாசன் பாடியுள்ளார். கவுதம், பிரிகிடா சகா நடித்து இருக்கின்றனர்.
ருத்ரா ஜித் இயக்கியுள்ளார். ஸ்ரீதர் நடனக் காட்சி அமைக்க, மல்லிகா அர்ஜூன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆதித் மாறன் எடிட்டிங் செய்ய, கவுதம் புரொடக்ஷன்ஸ் தயாரித்து இருக்கிறது. செந்தில் குமார் சரிதா சார்பில் எஸ்.எஸ் அன்ட் கோ என்ற நிறுவனம் இணை தயாரிப்பு செய்துள்ளது.