Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

யாரை காதலிக்கிறீர்கள் என்றே கேட்கிறார்கள்: ஐஸ்வர்யா லட்சுமி வருத்தம்

திருவனந்தபுரம்: மலையாள நடிகையும், டாக்டருமான ஐஸ்வர்யா லட்சுமி தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார். வெப்தொடர்களிலும், விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் அதிகமான படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக, தமிழ் இயக்குனர்களிடம் கதை கேட்கிறார். அவரது நடிப்பில் ‘ஆக்‌ஷன்’, ‘ஜகமே தந்திரம்’, ‘புத்தம் புது காலை விடியாதா’, ‘கார்கி’, ‘கேப்டன்’, ‘கட்டா குஸ்தி’, ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் 2 பாகங்கள் வெளியானது.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள ஐஸ்வர்யா லட்சுமி, நாள்தோறும் தனது சோஷியல் மீடியாவில் கவர்ச்சியான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவேற்றி வருகிறார். ஓய்வுநேரத்தில் தனது ரசிகர்களுடன் உரையாடி, அவர்களது கேள்விகளுக்கு பதிலளிக்கும் வழக்கமுள்ள ஐஸ்வர்யா லட்சுமி, சமீபத்தில் நடந்த உரையாடலில் ஒரு ரசிகர் தன்னிடம் கேட்ட கேள்விக்கு அளித்துள்ள பதில் வைரலானது.

அந்த ரசிகர், ‘தற்போது நீங்கள் யாருடனாவது ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறீர்களா...?’ என்று கேட்டார். உடனே அதற்கு வருத்தத்துடன் பதிலளித்த ஐஸ்வர்யா லட்சுமி, ‘என்னைப் பார்க்கும் எல்லோரும், ‘மேடம்... நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா?’ என்ற கேள்வியைத்தான் கேட்கின்றனர். நான் இப்போது மகிழ்ச்சியாக, சிங்கிளாக இருக்கிறேன்.

எனவே, தயவுசெய்து என்னை டபுள் ஆக்க முயற்சி செய்ய வேண்டாம்’ என்று சொன்னார். இதற்கு முன்பு அவரையும், இளம் நடிகர் அர்ஜூன் தாஸையும் இணைத்து காதல் வதந்திகள் பரவி யது. உடனே அவர்கள், ‘நாங்கள் இரண்டுபேரும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே’ என்று பதில் சொன்னார்கள். அந்த வதந்தி இன்னும் கூட அடங்கவில்லை.