கன்னட இளம் முன்னணி நடிகர் துருவா சர்ஜா நடிக்கும் பான் இந்தியா ஆக்ஷன் படம், ‘கேடி: தி டெவில்’. இதில் பாலிவுட் முன்னணி நடிகை ஷில்பா ஷெட்டி குந்த்ரா, சத்யவதி என்ற கேரக்டரில் நடிக்கிறார். கடந்த 1970களில் பெங்களூரில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகும் இப்படத்தில் துருவா சர்ஜா, ரவிச்சந்திரன், சஞ்சய் தத் ஆகியோருடன் ஷில்பா ஷெட்டி குந்த்ரா இணைந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ராஜ்ஜியங்களுக்கு இடையே நடக்கும் ஒரு மாபெரும் போரைப் பற்றிய கதைகொண்ட ‘கேடி: தி டெவில்’ படத்தில், ஒவ்வொரு ராஜ்ஜியத்துக்கும் ஒரு ‘சத்யவதி’ தேவை. இந்த ‘கேடி’ போர்க்களத்தில், நானும் ஒரு அதிக சக்தி வாய்ந்த கேரக்டரில் சத்யவதியாக நடிப்பது குறித்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்’ என்றார். கே.வி.என் புரொடக்ஷன்ஸ் வழங்கும் இப்படத்தை பிரேம் இயக்குகிறார்.
236