இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா ஆகியோரின் ரவுடி பிக்சர்ஸ், குஜராத்தி மொழியில் தங்களின் முதல் படமாக ‘சுப் யாத்ரா’ என்ற படத்தை தயாரித்துள்ளது. இதில் மல்ஹார் தாகூர், மோனல் கஜ்ஜார் நடித்துள்ளனர். தேசிய விருது பெற்ற இயக்குனர் மனீஷ் சைனி இயக்கியுள்ளார். இப் படம் தமிழில் விஜய் சேதுபதி, ரித்திகா சிங், யோகி பாபு நடிப்பில் வெளியான ‘ஆண்டவன் கட்டளை’ படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது. தெலுங்கு, மலையாளம், இந்தி, குஜராத்தி, மராத்தி ஆகிய மொழிகளில் நடிக்கும் மோனல் கஜ்ஜார், தமிழில் ‘சிகரம் தொடு’, ‘வானவராயன் வல்லவராயன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
254