சென்னை: துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படத்துக்கு ‘லக்கி பாஸ்கர்’ என்று பெயரிடப்பட்டுஉள்ளது. துல்கர் சல்மான் நடிப்பில் கடைசியாக வெளியான ‘சீதா ராமம்’ என்ற படம் பல்வேறு மொழிகளில் ஹிட்டானது. இதையடுத்து வெங்கி அட்லூரி இயக்கும் பான் இந்தியா படத்தில் அவர் நடிக்கிறார். கடைசியாக வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் தெலுங்கில் நடித்த ’சார்’ படமும், தமிழில் ‘வாத்தி’ படமும் திரைக்கு வந்தது. ‘சார்’, ‘வாத்தி’ ஆகிய படங்களைத் தயாரித்த சூர்யதேவரா நாகவம்சி, சாய் சவுஜன்யா இருவரும் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ், பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் மூலம் ‘லக்கி பாஸ்கர்’ என்ற படத்தை தயாரிக்கின்றனர். ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் வழங்குகிறது. படத்தைப் பற்றி இயக்குனர் வெங்கி அட்லூரி கூறும்போது, ‘ஒரு சாதாரண மனிதனின் நம்ப முடியாத உயரங்கள்’ என்றார். ‘சார்’, ‘வாத்தி’ ஆகிய படங்களுக்கு இசை அமைத்த ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்
கிறார். நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது.
54