மங்கூஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்க, விகாஸ் ஆனந்த் ஸ்ரீதரன் இயக்கத்தில் கிஷன் தாஸ், மோனிகா சின்னகொட்லா நடித்துள்ள ‘சிங்க்’ என்ற படம், நாளை நேரடியாக ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. பி.கே.சிவராம் ஒளிப்பதிவு செய்ய, அபிஜித் ராமசாமி இசை அமைத்துள்ளார். படம் குறித்து கிஷன் தாஸ் கூறுகையில், ‘எனது முதல் படம், ‘முதல் நீ முடிவும் நீ’. இப்போது ‘சிங்க்’ படத்துக்காக விகாஸ் ஆனந்த் ஸ்ரீதரன் கடுமையாக உழைத்துள்ளார். இப்படமும், இதன் பட்ஜெட்டும் சிறியதாக இருக்கலாம்.
ஆனால், நிறைய கனவுகளுடன் இப்படத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். அந்தவகையில் இது மிகப்பெரிய படம் என்று சொல்லலாம். படத்தை உருவாக்கி முடித்ததும், ’ஓடிடியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்’ என்று டிவிட் வெளியிட்டேன். சில மணி நேரத்தில் பலபேர் எங்களை தொடர்புகொண்டு உற்சாகப்படுத்தினர்’ என்றார்.