சென்னை: ‘மாமன்னன்’ படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வடிவேலு பாடிய பாடல் பதிவானது. ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். ‘மாமன்னன்’ படத்திற்காக யுகபாரதி வரிகளில் உருவான ஒரு பாடலை, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வடிவேலு பாடியுள்ளார்.
இப்பாடல் விரைவில் வெளியாகும் என இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். சில தினங்களுக்கு முன் ‘மாமன்னன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி வைரலானது. தற்போது இப்பாடல் பதிவின்போது எடுக்கப்பட்ட புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் ‘மாமன்னன்’ திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.