சென்னை: டிரெண்டிங் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் கே.சசிகுமார் தயாரிக்கும் ஹைபர்லிங்க் கிரைம் திரில்லர் படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. ‘ஒரு சின்ன விஷயம் பல பெரிய மாறுதல்களை உருவாக்கும்’ என்ற கேயாஸ் விதியின்படி பல திரைக்கதைகள் உருவாகியுள்ளன. ஒரு கொலையில் தொடர்புடைய 4 பேரின் சூழலை ஹைபர்லிங்க்காக இணைத்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. விதார்த், கலையரசன், சந்தோஷ் பிரதாப், திரிகுன், ஜான் விஜய், தேஜூ அஸ்வினி, அதுல்யா சந்திரா, ஸ்வேதா டோரத்தி, ‘சுந்தரா டிராவல்ஸ்’ ராதா நடிக்கின்றனர். இயக்குனர்கள் பி.வாசு, தங்கர் பச்சான் ஆகியோரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய சகோ கணேசன் இயக்குகிறார். என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்ய, அஜீஸ் இசை அமைக்கிறார்.
75