இந்தியன் 2 படத்தில் தற்போது ஷங்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இந்தப்படத்தில் சேனாபதி என்ற கேரக்டரில் அவர் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். முதல் பாகத்திலும் இந்த கேரக்டர் முக்கியமான கவனத்தை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த கேரக்டரில் கமலை மீண்டும பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். படத்தின் சூட்டிங் இம்மாதத்துடன் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படம் பொங்கல் ரிலீசாக வெளியாக உள்ளதாகவும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் பிராஜெக்ட் கே படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படம் 2024 பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கமல் நடிப்பது உறுதிப்படுத்தப்பட்டால், இந்தியன் 2 மற்றும் ப்ராஜெக்ட் கே என கமலின் அடுத்தடுத்த படங்கள் ஒரே நாளில் ரிலீசாகும் வாய்ப்பு உள்ளது.
இந்தியன் 2 மற்றும் ப்ராஜெக்ட் கே என இரண்டு படங்களும் மிகவும் பிரம்மாண்டமான படங்களாக உருவாகி வருகின்றன. தன்னுடைய கேரக்டர்களை இந்தப் படங்களில் கண்டிப்பாக கமல்ஹாசன் சிறப்பாகத்தான் கொடுப்பார். அந்த வகையில் இந்த இரு படங்களும் திட்டமிட்டபடி உருவாகும் பட்சத்தில், ஒரே நாளில் கமலின் இரண்டு படங்கள் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமையும். இந்திய சினிமாவில் சிறப்பான தருணமாகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை.