கோவை: கோயம்புத்துரில் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி, இளைஞர்களின் யூத் Icon ஆக கொண்டாடப்படும், ஹிப் ஹாப் தமிழா ஆதியின் “ரிடர்ன் ஆஃப் த டிராகன்” (Return Of The Dragon) இசைக்கச்சேரி நடைபெறவுள்ளது. டார்க் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ராஜ் மெலோடீஸ் நிறுவனங்கள் இணைந்து, மிகப்பிரம்மாண்டாமான முறையில், கோயம்புத்தூரின் மிகபெரிய கொடிசியா மைதானத்தில், இந்நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. தனியிசை துறையில் ராப் பாடகராக அறிமுகமாகி, தமித்திரைத்துறையில் இசையமைப்பாளராகவும், நாயகனாகவும் உயர்ந்து, இன்றைய இளைஞர்களின் இளைஞர்களுக்கான எடுத்துக்காட்டாக ஆக மாறியுள்ளவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசைக்கச்சேரிக்கு உலகம் முழுதும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. “Return Of The Dragon” எனும் பெயரில் லண்டன், மலேசியா என உலக நாடுகளில் வெற்றிகரமாக இசைக்கச்சேரி முடிந்த நிலையில் தற்போது தன் சொந்த ஊரான கோயம்புத்தூரில் இசைக் கச்சேரியை நடத்தவுள்ளார். இந்த இசைக் கச்சேரியில் கோயம்புத்தூர் ரசிகர்களுக்கென பிரத்தியேகமாக பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கலந்துகொள்ளும் வகையில், முழுப் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்துரில் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்களை, ஆன்லைனில் மூலம் எளிதாக பெற்றுக்கொள்ளலாம்.