சென்னை: வரம் சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘இறுதி முயற்சி’ படத்தினை இயக்குனர், நடிகர் பார்த்திபனின் உதவி இயக்குனர் வெங்கட் ஜனா எழுதி இயக்கி உள்ளார். இறுதி முயற்சி திரைப்படம் படப்பிடிப்பு நிறைவு பெற்றதை கொண்டாட படக்குழுவினர் மனநலம் குன்றிய சிறுவர்கள் பள்ளிக்கூடத்திற்கு சென்று அங்கு படிக்கும் சிறுவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கினர்.
சாதாரண பெட்டி கடை வைத்திருப்பவர் முதல் பல கோடிகளில் வணிகம் செய்யும் பெரும் தொழில் அதிபர்களும் சந்திக்கும் ஒரு பிரச்னையை நெஞ்சத்தை பதை பதைக்க வைக்கும் வகையில் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் சொல்கிறது இப்படம் என்கிறார் வெங்கட் ஜனா. ரஞ்சித், மெகாலி, மீனாட்சி முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, விட்டல் ராவ், கதிரவன், புதுப்பேட்டை சுரேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். எடிட்டிங் வடிவேல் விமல் ராஜ், ஒளிப்பதிவு சூர்யா காந்தி, இசை சுனில் லாசர்.