சென்னை: பார்த்திபனின் படத்துக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் மறுப்பு தெரிவித்துள்ளார். பார்த்திபன் எழுதி, இயக்கி நடித்த கடைசி படம் இரவின் நிழல். இந்த படத்துக்கு ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்நிலையில் தனது அடுத்த பட வேலைகளை பார்த்திபன் தொடங்கியுள்ளார். இந்த படத்துக்கு டீன் என தலைப்பு வைத்துள்ளார். இது 15 வயது முதல் 17 வயது சிறுவர்களை பற்றிய படமாக உருவாகிறது. வழக்கமாக இந்த வயது சிறுவர்களின் கதை என்றால் அதை அடல்ட் கதையாகவோ பள்ளி காதல் கதையாகவோ தமிழ் சினிமாவில் படமாக்குவார்கள். ஆனால் பார்த்திபன் வேறொரு கோணத்தில் டீன் ஏஜ் இளைஞர்களின் கதையை படமாக்க இருக்கிறாராம். இதற்காக இசையமைக்க ரஹ்மானுக்கு மெயில் மூலம் பார்த்திபன் கால்ஷீட் கேட்டார். வழக்கமாக ரஹ்மானிடம் மெயில் மூலம்தான் திரையுலகினர் தொடர்புகொள்வார்கள். பார்த்திபனின் மெயிலுக்கு ரஹ்மான் உடனே பதில் அனுப்பினார். அதில், புது படங்கள் கைவசம் உள்ளதால், உங்கள் படத்துக்கு இசையமைக்க முடியாத சூழல் உள்ளதாக தெரிவித்துள்ளார். ரஹ்மானின் இந்த பதிலை ஏமாற்றத்துடன் ஏற்பதாக பார்த்திபன் கூறியுள்ளார்.
92