ஐதராபாத்: பான் இந்தியா நடிகர் ராம் சரண், உபாசனா தம்பதிக்கு கடந்த 20ம் தேதி ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதுபற்றி நெகிழ்ச்சியுடன் பேசிய ராம் சரண், ‘என் மனைவியும், மகளும் நலமாக இருக்கின்றனர். மகளுக்கு அவள் பிறந்த தேதி யில் இருந்து 21 நாள் கழித்து பெயர் சூட்டுகிறோம். அவளது பெயரை ஏற்கனவே தேர்வு செய்துவிட்டோம். இதுபோல் அற்புதமான தருணத்துக்காகவே இவ்வளவு காலம் காத்திருந்தோம். குட்டி தேவதை என் வீட்டுக்கு வந்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். கடவுள் எங்களை ஆசீர்வதித்துள்ளார். உண்மையாகவே என் மன உணர்வுகளை விவரிக்க வார்த்தைகள் கிடைக்காமல் தவிக்கிறேன். எனது மகளின் எதிர்காலத்தை நினைத்து உற்சாகமாக இருக்கிறேன்’ என்றார். தற்போது ஷங்கர் இயக்கும் ‘கேம் சேஞ்சர்’ என்ற பன்மொழி படத்தில் ராம் சரண் ஹீரோவாக நடித்து வருகிறார்.
39