பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவரான வித்யா பாலன் நடித்துள்ள இந்தி படம், ‘நீயாத்’. திரைக்கு வந்த ‘மிஷன் மங்கள்’ என்ற படத்தை தொடர்ந்து வித்யா பாலன் நடித்துள்ள படம், ‘நீயாத்’. அனு மேனன் இயக்கியுள்ளார். அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனம் தயாரித்துள்ளது. ‘சகுந்தலா தேவி’ என்ற படத்துக்குப் பிறகு அனு மேனன், வித்யா பாலன் மீண்டும் இணைந்துள்ளனர்.
முக்கிய வேடங்களில் ராம் கபூர், ராகுல் போஸ், நீரஜ் கபி, அம்ரிதா பூரி நடித்துள்ளனர். இப்படம் வரும் ஜூலை 7ம் தேதி திரைக்கு வருவது உறுதி என்று படக்குழு அறிவித்துள்ளது. இதில் மீரா ராவ் என்ற கதாபாத்திரத்தில் வித்யா பாலன் நடித்துள்ளார். ஒரு கொலையைத் தொடர்ந்து நடக்கும் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் வகையில், வித்யா பாலனின் துப்பறிவாளர் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது.