38
மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கியதால், 5 மாதங்களாக வீட்டிலேயே முடங்கியிருந்த யோகி பாபுவுக்கு நிறைய புதுப்படங்கள் ஒப்பந்தமாகியுள்ளது. கன்னடத்தில் ஹிட்டான மாயா பஜார் என்ற படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இதன் உரிமையை சுந்தர்.சி வாங்கியுள்ளார். அவர் தயாரித்து நடித்த ஐந்தாம்படை என்ற படத்தை இயக்கிய பத்ரி இப்படத்தை இயக்குகிறார். பிரசன்னா, ஷாம், அஸ்வின், யோகி பாபு நடிக்கின்றனர். தவிர, இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் மகன் தீபக் இயக்கத்தில் விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடிக்கும் படத்திலும் நடிக்கிறார். இதில் கதையின் நாயகியாக நடிக்கிறார் டாப்ஸி. இந்த படத்தில் முழுநீள காமெடி ரோலில் ஒப்பந்தமாகியுள்ள யோகி பாபு, கோலமாவு கோகிலா படத்தை போல் இப்படத்தின் காமெடி பிரபலமாகும் என்று சொன்னார்.